சங்கரன்கோவில், ஜூலை 14 –
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி குருவிகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரிசாத்தான் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 23.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். குருவிகுளம் யூனியன் சேர்மன் விஜயலட்சுமி, காரிசாத்தான் பஞ்சாயத்து தலைவர் வீராசாமி முன்னிலை வகித்தனர். தொடர்ந்து புதிய கட்டிடத்தை ராஜா எம்எல்ஏ திறந்து வைத்தார்.
இதில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், ஐந்திணை மக்கள் கட்சி தலைவர் தேவதாஸ், குருவிகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சேர்மத்துரை, ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் பரமசிவன், மாவட்ட பிரதிநிதி பொன்னுத்தாய், கிளை கழகச் செயலாளர்கள் பாலு, பாலுசாமி, சின்னத்துரை, எழிலன், வேல்ராஜ், பால்சாமி, சரவணன், தங்கவேலு, குருவிகுளம் கலைச்செல்வன், பஞ்சாயத்து துணைத் தலைவர் மல்லிகா, வார்டு உறுப்பினர்கள் வளர்மதி, பாலமுருகன், மலையரசி, சண்முகசுந்தரம், முத்தையா, கற்பகவள்ளி, சின்னத்துரை, காந்தி மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் கந்தசாமி நன்றி கூறினார்.