தூத்துக்குடி , அக்:08
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் “காசநோய் இல்லா இந்தியா இயக்கம்” சார்பில், காசநோய் இல்லாத 75 கிராம ஊராட்சிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மகாஜன் அவர்கள், காசநோய் தடுப்பு மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட 75 கிராம ஊராட்சிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்.காசநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளுக்கு இந்த அங்கீகாரம் ஒரு முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது



