தென்தாமரைகுளம், ஜூலை 30 –
அகஸ்தீஸ்வரம் அருகேயுள்ள கவற்குளம் தேரிவிளை அருள்மிகு சுடலைமாட சுவாமி திருக்கோவிலில் திறந்தவெளி மேற்கூரை கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் பேரூர் செயலாளர் சிவபாலன் தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு திறந்தவெளி கலையரங்கினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் தம்பி தங்கம், ஒன்றிய பொருளாளர் தங்கவேல், குமரி கிழக்கு மாவட்ட அம்மா பேரவை தலைவர் பார்த்த சாரதி, சுசீந்திரம் பேரூர் கழக செயலாளர் குமார், குமரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமரகுரு, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலர் விஜயன், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் குமாரவேல், ஜெ., பேரவை மாவட்ட இணைச் செயலாளர் ரமேஷ், நிர்வாகிகள் பாலன், சுரேஷ், மணிகண்டன், சிவராஜன், கிருஷ்ண குமார், கிளைச் செயலாளர்கள் கலைவளன், முத்துக்குமார், கண்ணன் உட்பட நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.