ராணிப்பேட்டை மாவட்டம் காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொலைந்த /களவு போன 30 செல்போன்களை காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா தலைமையிலான போலீசார் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது
இதன் மதிப்பு சுமார் 4,50000 ஆகும்.
உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் தனிப்பிரிவு ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் பொதுமக்கள் தங்களின் செல்போன்கள் தொலைந்து விட்டால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் இணைய வழி குற்றங்கள் தொடர்பாக உதவ எண் 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என்று அறிவுறுத்தினார்.