சேலம், ஜூலை 29 –
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவன் தரணிஷ் என்பவருக்கு திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டிட பொறியியல் இளங்கலை பட்டம் பயில்வதற்கு ஆண்டிற்கு ரூ.56,000 வீதம் நான்காண்டுகளுக்கு முழு கல்வி கட்டணத்தை ஏற்பதற்கு உரிய ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் முன்னிலையில் தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் வழங்கினார்.
சேலம் மாவட்டத்தில் “கல்லூரி கனவு பெரிதினும் பெரிது கேள்” உயர்கல்வி சேர்க்கைக்கான கட்டுப்பாட்டு அறை மூலம் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு வழிகாட்டல், ஆலோசனை மற்றும் கல்லூரி சேர்க்கை தொடர்பான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு உயர்நிலைப் – மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் தரணிஷ் என்கிற மாணவருக்கு கல்வி கட்டண உதவி வழங்கப்பட்டது.



