வேலூர்_15
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா, பேரணாம்பட்டு காவல் நிலையம் பின்புறம், முருகன் கோவில் தெரு, பகுதியைசேர்ந்த கணபதி த/பெ.ஆறுமுகம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் நான் வன்னியர் வகுப்பை சார்ந்தவர் எனது மனைவி தில்ஷாத் முஸ்லிம் வகுப்பைச் சார்ந்தவர் நாங்கள் இருவீட்டாரின் எதிர்ப்பை மீறி நாங்கள் திருமணம் செய்து கொண்டு ஒற்றுமையோடு வாழ்ந்து வருகிறோம். எங்கள் இரு வீட்டாரின் உறவினர்கள் எங்களை ஒதுக்கி வைத்துள்ளார்கள் ஆனால் எங்களுக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளனர். நாங்கள் பதிவு திருமணம் செய்ய முடியவில்லை ஆகையால் நான் தனியார் வாகனங்களில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன் என் குடும்ப சூழ்நிலை கருதி நான் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகிறேன் ஆகையால் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அவர்கள் கருணை மனம் கொண்டு என்னுடைய மனுவை பரிசீலனை செய்து என் வாழ்வாதாரத்துக்கு வழி காட்ட வேண்டும் என்று வட்டாட்சியருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளார் இவ்வாறு மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.