கிருஷ்ணன் கோயில், ஆகஸ்ட் 15 –
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில் நடைபெற்ற 79 வது சுதந்திர தின விழாவில் வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தேசியக் கொடியேற்றி என்.சி.சி. மாணவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு உரையாற்றினார். துணை வேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வி. வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.
சுதந்திர தின உறுதிமொழி அனைவரும் எடுத்தனர். இயக்குநர்கள், டீன்கள்,
துறைத்தலைவர்கள், கலசலிங்கம் குரூப் கல்வி நிறுவன முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டுத்துறை, என்.சி.சி, எலெக்ட்ரிக்கல், துப்புரவு துறை அதிகாரிகள், அலுவலர்கள், மாணவர்கள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.



