ஸ்ரீவில்லிபுத்தூர், செப். 01 –
கிருஷ்ணன் கோயில் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலையில் ஓணம் பண்டிகை மேளதாளத்துடன் மாணவிகளின் நடன நிகழ்ச்சியோடு கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகை பல்கலை முனைவர் வேந்தர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் துவக்கி வைத்தார். துணை வேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
போட்டோகிராபி மலரை துணை தலைவர் வெளியிட்டார். மாணவர்களளின் திருவாதிரா,
பூக்கோலம், கலை நிகழ்ச்சிகள் செண்டிமேளத்துடன் நடைபெற்றது. பேராசிரியர்கள் என்.கே. அமல்ஜித், ஸ்ரீலேகா மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.



