ஸ்ரீவில்லிபுத்தூர், செப். 27 –
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலையில் தேசிய சேவை திட்டம் (என்எஸ்எஸ்) சார்பில் என்எஸ்எஸ்தினம் 2025 அனைவரையும் உயர்த்தி, புறக்கணிக்கப்பட்ட சமூகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் என்ற தலைப்பில் வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. கல்வியுடன் சேவை மனப்பாங்கும் வளர வேண்டும் என வேந்தர் தலைமை உரையில் வலியுறுத்தினார். 360-க்கும் மேற்பட்ட மாணவர் தன்னார்வலர்கள் விழாவில் கலந்து கொண்டு “மனிதாபிமானத்துடன் வாழ்வோம்” என்ற உறுதிமொழி எடுத்தனர்.
சிறப்பு விருந்தினர் “ராஜேஷ் உதவும் கரங்கள்” அறக்கட்டளை நிறுவனர் மற்றும் முன்னாள் விஏஓ. துரை பிரித்விராஜ் கலந்து கொண்டு “சமூக சேவைக்காக இளைஞர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்” என்ற கருத்தை வலியுறுத்தினார். விழாவில் மாணவர் நல இயக்குநர் முனைவர் எஸ்.பி. பாலகண்ணன், விவாதம், கட்டுரை எழுதுதல், வினாடி வினா, மல்டிமீடியா பிரசண்டேஷன் மற்றும் போஸ்டர் தயாரித்தல் போன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், ரொக்க பரிசுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜ்பிரதீஷ் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.



