திருப்பரங்குன்றம், ஜூலை 29 –
மதுரை பெருங்குடி அம்பேத்கர் நகரில் நேற்று முன்தினம் மாலை வெட்டி கொலை செய்யப்பட்ட கருமலை வழக்கில் பெருங்குடி பகுதியைச் சேர்ந்த முகமது அல்தாப் (19) மற்றும் சாய்ராம் (17) ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட
வகையில் கருமலை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சமயத்தில் இரு டூவீலரில் மொத்தம் ஐந்து பேர் வந்துள்ளனர்.
பெருங்குடி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்ற கோழி சிவா முத்துமணி மற்றும் சக்தி ஆகியோர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசரின் முதல் கட்ட விசாரணையில் தெரிகிறது. மேலும் பெருங்குடி அம்பேத்கர் நகர் கருமலை கொலை வழக்கில் ஈடுபட்ட சிவா (எ) கோழி சிவா, முத்துமணி, சக்தி ஆகிய மூன்று பேரும் கோர்ட்டில் ஆஜராக உள்ள தகவலையடுத்து ஆய்வாளர் சரவணன் தலைமையில் பெருங்குடி போலீசார் மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.