By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சியடைய அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சர் ராஜேஷ் குமார் அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சியடைய அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சர் ராஜேஷ் குமார் அறிவுறுத்தல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சியடைய அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சர் ராஜேஷ் குமார் அறிவுறுத்தல்

Last updated: May 26, 2026 3:49 pm
May 26, 2026
23 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 26 –

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை (கட்டடம், நீர்வளம்), ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கையினை உடனுக்குடன் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 11280 எக்டேர் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தென்னையில் வெள்ளை பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு நில உடமை அடையாள அட்டைகள் 1,87,554 பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து வேளாண்மை துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இத்திட்டங்களில் அதிகளவு விவசாயிகள் இணைந்து பயன்பெற துறை சார்ந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சின்ன முட்டம், குளச்சல், தேங்காய் பட்டினம், முட்டம் ஆகிய 4 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. தொடர்ந்து 35 இடங்களில் மீன் இறங்குதளங்கள் செயல்பட்டு வருகின்றன. மீனவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் உரிய முறையில் சென்றடைகிறதா என்பது குறித்து துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைபெறும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அதிகளவில் பணிகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நெடுஞ்சாலை துறையின் சார்பில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை 4 வழி சாலை பணிகள், சாலை விரிவாக்க பணிகள், பாலப்பணிகள்களையும் விரைந்து முடித்திட வேண்டும். இரயில்வே துறையின் சார்பில் நடைபெற்று வரும் நுள்ளிவிளை பாலப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் போக்குவரத்தினை சீரமைத்திட துரித நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம், விபத்து மரண உதவி தொகை, ஈமச்சடங்கு உதவி தொகை, இயற்கை மரணம் உதவி தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவி தொகை உள்ளிட்டவைகளை வழங்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆதி திராவிட நல துறை, மாவட்ட வேலைவாய்ப்பு துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறை, சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலை துறை உள்ளிட்ட அனைத்து துறை திட்டங்கள் செயல்படுத்துவதில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் அதனை மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்று என்னிடம் தெரிவித்தால் அந்தந்த துறை அமைச்சர்களிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். எனவே கன்னியாகுமரி மாவட்டத்தை வளர்ச்சி மாவட்டமாக கொண்டு செல்ல அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, மாவட்ட வன அலுவலர் அன்பு, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் உயர் அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா: கணபதி ஹோமத்துடன் தொடங்கியது
புதுக்கடை அருகே வீட்டில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
புதுக்கடை அருகே நகைக்கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்: எம்.பி தொடங்கி வைத்தார்
நாகர்கோவிலில் மழைநீர் வடிகால்களில் குப்பைகள், கழிவுகள் கொட்ட கூடாது; மேயர் மகேஷ் வேண்டுகோள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்

December 30, 2024
52 Views
இளம்பெண் குளிப்பதை படம் பிடித்து மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த ராணுவ வீரர் கைது
பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள்
மாங்காடு நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் மனு தாக்கல்
கருங்கல் அருகே குளியலறையில் மாணவி குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற தொழில் அதிபர் போக்சோவில் வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account