களியக்காவிளை, ஜன. 29 –
களியக்காவிளை அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்த் தலைமையில் போலீசார் அதங்கோடு பகுதியில் ரோந்த் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்களிடம் 25 கிராம் அளவிலான கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இரண்டு பேரும் நித்திர விளை கல்வெட்டான் குழி பகுதியை சார்ந்த பிரைட் மகன் அல்பிட்டோ ( 19) ஜெஸ்டின் ராஜ் மகன் ஜெபின் ராஜ், (20) இருவரும் பெயிண்டர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவர் மீது நித்திரவிளை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இருவரையும் களியக்காவினை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


