நாகர்கோவில், பிப். 27 –
நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் ரயில்வே நிர்வாகம் சார்பில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ரயில்வே அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். மேலும் இந்த பாலம் நாகர்கோவில் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பாலப் பணி குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும் போது: பாலப்பணிகள் முழுமையாக நிறைவடைதற்கு இப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தை மாற்றி தர வேண்டும் அப்படி மாற்றி தந்தால் இந்த பணி 15 நாட்களுக்குள் முடிவடையும் எனவும் தெரிவித்தார்.
இதில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மாநிலச் செயலாளர் சீனிவாசன், ரயில்வே அதிகாரிகள் ஸ்ரீகுமார், ஆனந்த், ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



