தஞ்சாவூர், ஆகஸ்ட் 15 –
தஞ்சாவூர் அடுத்துள்ள திருவையாறு ஒளவை மழலையர் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியை கோகிலா வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். அவ்வை அறக்கட்டளை செயலாளர் முகில்வேந்தன் முன்னிலை வகித்தார். தேசிய கொடியை மும்பை ரஞ்சித் குமார், விளையாட்டுக் கொடியினை பெற்றோர் ஆசிரியக்கழக துணைத்தலைவர் சிவசங்கர் ஏற்றி வைத்தனர்.
பணி ஓய்வு பேராசிரியர் புலவர் விஜயலட்சுமி பாராட்டி கௌரவிக்கப்பட்டார். நாவலர் நா.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரி அறங்காவலர் பேராசிரியர் விடுதலை வேந்தன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். அதிகப் புள்ளிகள் பெற்ற முதல் மாணவனுக்கு விளையாட்டு கோப்பையை கலையருவி ரஞ்சித் குமார் வழங்கினார்.
பள்ளி தாளாளர் கண்ணகி கலைவேந்தன் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார். ஆசிரியர்கள் தீபா, மேரி வெர்ஜீனியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். விளையாட்டு பொறுப்பாசிரியை பிரேமலதா நன்றி கூறினார்.



