பூதப்பாண்டி, செப்டம்பர் 27 –
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை தரக்குறைவாக பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து திட்டுவிளை சந்திப்பில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தலைவர் சாம் சுந்தர் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ். ராஜன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் வர்த்தக காங்கிரஸ் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் சிவகுமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முகமது ராபி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜீவா, மாவட்ட துணை தலைவர் பிரபு, மாநகர மாவட்ட செயலாளர் மகேஷ், நாகர்கோவில் சட்ட மன்ற தொகுதி துணை தலைவர் மதன், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொதுச் செயலாளர் அபிசேக், பூதப்பாண்டி பேரூர் தலைவர் ஏசுராஜா ஜோயல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



