சென்னை, ஆகஸ்ட் – 05 –
இந்தியாவில் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான எச்சிஎல் ஃபவுண்டேஷன்,
ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் கல்லூரியில் 2025-ம் ஆண்டு மாற்றத்திற்கான தேசிய விளையாட்டு இறுதிப் போட்டியின் 7-வது பதிப்பு நடத்தியது. பொருளாதாரத்தில் பின்தங்கிய விளையாட்டில் திறமையுள்ள சிறுவர்கள், இளைஞர்களை கண்டறிந்து பல அடுக்கு தகுதிச் சுற்றுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் விளையாட்டு வீரர் ஆணையத்தின் துணைத் தலைவர் அச்சந்த சரத் கமல் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்த ஆண்டு நடைபெற்ற மாற்றத்திற்கான விளையாட்டுப் போட்டியில்
இந்தியா முழுவதிலுமிருந்து தமிழ்நாடு உள்பட 14 மாநிலங்களை (உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், நாகாலாந்து, சிக்கிம், அசாம், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா) சேர்ந்த 12,256 இளம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் எச்.சி.எல் ஃபவுண்டேஷனின் இயக்குநர் டாக்டர் நிதி பந்திர் கூறியதாவது :
2025 பதிப்பில் 45 மாவட்டப் போட்டிகள், 9 மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் 3 மண்டலப் போட்டிகள் இடம்பெற்றன. இதில் கால்பந்து, கைப்பந்து, கபடி, கூடைப்பந்து, கிரிக்கெட், டச் ரக்பி, கோ-கோ, ஹேண்ட்பால் மற்றும் ஹாக்கி போன்ற குழு விளையாட்டுகள்; ஸ்பிரிண்ட்ஸ், தடை தாண்டுதல், தாவல்கள், ஷாட் புட், ஈட்டி எறிதல் மற்றும் ரிலே பந்தயங்கள் போன்ற தடகள மற்றும் கள நிகழ்வுகள்; மற்றும் பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், வில்வித்தை, சதுரங்கம் மற்றும் கேரம் போன்ற தனிப்பட்ட விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை உள்ளடக்கியதாகும்.
எச்.சி.எல் ஃபவுண்டேஷன் குறிப்பாக வசதி குறைந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே, திறனை வெளிப்படுத்தவும், இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவும் என்றார்.