ஊத்துக்குளி, ஆகஸ்ட் 3 –
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் ஒரு பகுதியாக வருகிறது. இது திமுகவில் ஈரோடு மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. இங்கு பேரூர் கழக பொறுப்பாளராக கட்சி அடையாள உறுப்பினர் அட்டை கூட இல்லாத திருமூர்த்தி என்பவரை நியமித்துள்ளதாகவும் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்பவரை பொறுப்பாளராக நியமிக்க வலியுறுத்திய நிலையில் இந்த அறிவிப்பு வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பேரூர் பகுதியில் மட்டும் 1500 வாக்குகள் அதிகமாக பெற கடுமையாக உழைத்த நிர்வாகிகளை கவலை அடைய செய்துள்ளதாகவும். இது போன்ற நிகழ்வுகள் பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் தங்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து திருமூர்த்தி என்பவரை பேரூர் கழகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை திரும்ப பெற வலியுறுத்தியும் ரமேஷ் குமார் என்பவரை பொறுப்பாளராக நியமிக்க வலியுறுத்தி திமுக வார்டுச் செயலாளர், கிளைச் செயலாளர், பாக முகவர்கள் என 100- க்கும் மேற்பட்டோர் தங்களது நிர்வாக பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதனால் ஊத்துக்குளி பகுதியில் திமுகவினரிடையே சலசலப்பு எழுந்துள்ளது.