ஊத்தங்கரை, அக்டோபர் 17 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை சம்பந்தமான அட்டையை பாக்கெட்டில் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 2021 ஆம் ஆண்டு தேர்தல் கால வாக்குறுதி படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. முன்னிலை பொறுப்பாளராக திருஞானம் காத்தவராயன் நந்தகுமார், வெங்கடேசன் கலந்து கொண்ட நிலையில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொது செயலாளர் மாம்கி ஞானசேகரன் மத்தூர் அதியமான், சுரேஷ் திருநாவுக்கரசு மற்றும் சுபாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட மற்றும் பலர் பங்கேற்றனர்.



