கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 26 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, சிங்காரபேட்டை ஆகிய காவல் நிலையத்தில் வழக்கு கோப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆய்வு மேற்கொண்டார். சிங்காரபேட்டை காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் நித்தியா, ஊத்தங்கரை காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் மோகன் ஆகியோருக்கு ஓராண்டு கால பணி தகுதி காண் பருவம் நிறைவு பெறுவதையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து ஓராண்டு காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு கோப்புகள் மற்றும் பதிவேடுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் முருகன், காவல் உதவி ஆய்வாளர்கள் மோகன், பாலகிருஷ்ணன், ரமணி உள்ளிட்ட காவலர்கள் உடனிருந்தனர்.



