கிருஷ்ணகிரி, ஜூலை 05 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பிராணா கேந்திரா ஆஸ்ரமம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஊத்தங்கரை கிளை இணைந்து நடத்தும் மாரத்தான் 2025 இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிராணா கேந்திரா ஆசிரமம் சுவாமி விஷ்ணு யோகேஸ்வரானந்தா தலைமையில் நடைபெறுகிறது. அகில பாரதீய சன்யாசிகள் சங்க நிறுவனர் ராமானந்தபுரி, சுவாமி கலியுக குருஜி, சம்மட்டி சித்தர் தபோவனம், சதானந்த சரஸ்வதி சுவாமிகள், யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் அருள், ஆர்பிஎஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பொன்னுசாமி, டவுன் பஞ்சாயத்து தலைவர் அமானுல்லா, ஆர் டி அக்ரோ சேர்மன் தர்மலிங்கம், ஊத்தங்கரை அனைத்து வணிகர் சங்க செயலாளர் உமாபதி ஆகியோர் முன்னிலையில் அதியமான் கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமால் முருகன், ஃபர்ஸ்ட் வேர்ல்ட் கம்யூனிட்டி நிர்வாக இயக்குனர் C.K. அசோக்குமார் ஆகியோர் மாரத்தான் போட்டியை துவக்கி வைக்கிறார்கள். நிகழ்ச்சியில் சேலம் லெகசி ஹோல்டிங் கம்பெனி வசந்தகுமார், திர் பிராண யோகா யோகராஜ் பூவேந்திரன் இஸ்ரேல் மாயன் பென் தோவ்(துர்கா) மற்றும் நேசம் தொண்டு நிறுவனர் குணசேகரன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர். அனைத்து இளைஞர்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.