திருப்பூர், ஜூன் 28 –
மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண் 31-ல் உள்ள டிஎஸ்ஆர் லே அவுட் 6-வது வீதியில் 5.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய உயர் மின் கோபுர துவக்க விழாவினை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கே. சுப்பராயன், திருப்பூர் மாநகராட்சி மேயரும் திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான ந. தினேஷ் குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்வில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், வடக்கு மாநகர திமுக கழகச் செயலாளர் தங்கராஜ், 2-வது மண்டல தலைவர் தம்பி ஆர் கோவிந்தராஜ், உதவி செயற்பொறியாளர் ஹரி, பகுதி செயலாளர் போலார் சம்பத், மாமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், தாமோதரன், இளம் பொறியாளர் சண்முக சுந்தரம், 31-வது வார்டு திமுக கழக செயலாளர் கோமகன், செயற்பொறியாளர் அலாவுதீன், ஒப்பந்ததாரர் கோமதி கன்ஸ்ட்ரக்சன் வெள்ளையங்கிரி, மாடன் டெக் ஷாஜகான் மற்றும் ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.