திருப்பத்தூர், ஜூலை 15 –
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட உடையாமுத்தூர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறை தீர்வு நாள் கூட்டத்தில் தேமுதிக மாவட்ட துணை செயலாளர் சரவணன் மனு அளித்தார்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தாவது: உடையா முத்தூர் கிராமத்தில் சமத்துவப்புரத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும். அதே பகுதியில் உடற்பயிற்சி கூடத்தினை அமைத்து தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். பல வருடங்களாக தார் சாலை அமைக்கப்படாமல் மோசமாக உள்ளது.
மேலும் அந்த பகுதியில் இளைஞர்கள், மாணவ மாணவிகள் பெரும்பாலும் வசித்து வருவதால் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் பணிகளுக்கும், மத்திய மாநில அரசு வேலைக்கும் செல்லவும், கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி நூலகம் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் சிவ சௌந்தரவல்லி அவர்கள் மனு மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார். தேமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் குணபாலன், கந்திலி வடக்கு ஒன்றிய செயலாளர் யோகநாத் மற்றும் பலரும் இருந்தனர்.



