விளாத்திகுளம், ஜூலை 25 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் குளத்தூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்னும் சிறப்பு முகாமில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வருவாய்த்துறை, ஊராட்சித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை, மின்வாரியத்துதுறை உள்ளிட்ட அரசின் அனைத்து துறை அடங்கிய முகாம் அமைக்கப்பட்டு, பட்டாவில் பெயர்மாற்றம், வாரிசு சான்றிதழ், குடிநீர் இணைப்பு, தொழில் வரி விதிப்பு, மின் இணைப்பு, ஆதார் அட்டை திருத்தம், முதியோர் உதவித்தொகை, தெருவோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல் உள்ளிட்ட சேவைகள வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக குளத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் நடைபெற்ற சிறப்பு முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் துவக்கி வைத்து பொதுமக்களின் குறைகளை கேட்டுறிந்தார். அப்போது மின்வாரியத்தில் இணைய வழி மூலமாக பெயர் மாற்றம் செய்த பயனாளி ஒருவருக்கு உடனே உத்தரவினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார்.
இந்நிகழ்வில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல், வட்டாட்சியர் கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் விமலா, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.