ஈரோடு, நவ. 22 –
ஈரோடு மீனாட்சி சுந்தரம் வீதியில் அப்பல்லோ பல் மருத்துவமனை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு கே.இ. பிரகாஷ் எம் பி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய ஆஸ்பத்திரியை திறந்து வைத்தார். வி சி சந்திர குமார் எம் எல் ஏ, மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.
முன்னதாக தமிழ் நாடு மற்றும் கேரள மாநில பொறுப்பாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.
இந்த பல் மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அனைத்து வகையான சிகிச்சை மருத்துவங்களும் செய்யப்படும் என்றும் திறப்பு விழா சலுகையாக 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.



