ஈரோடு, ஜூலை 23 –
ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திற்கு ‘சுதந்திர தின வெள்ளிவிழா பேருந்து நிலையம்’ என்று பெயர் சூட்டி ஆர்ச் அமைக்கக் கோரி ஈரோடு மாநகராட்சி ஆணையரிடம் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே.என். பாஷா மனு அளித்தார். அப்போது ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ஈ.பி. ரவி உடன் இருந்து இந்தக் கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் இருப்பதாகவும் எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆணையரிடம் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் ஈரோடு மாவட்ட நெசவாளர் அணி தலைவர் மாரிமுத்து, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் முகமது அர்சத், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சேவாதள தலைவர் முகமது யூசுப் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கனகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.