ஈரோடு மே 11,
ஈரோடு டாக்டர் ஆர்.ஏ.என்.எம் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு 100 % வேலைவாய்ப்பு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
டாக்டர் ஆர். ஏ.என்.எம்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி 1995 ஆம் ஆண்டு தி.முதலியார் எஜுகேஷனல் ட்ரஸ்டின் மூலமாக ஆரம்பிக்கப்பட்டு கல்வி சேவையில் 30 ஆண்டு காலமாக வெற்றி நடை போடும் இருபாலர் பயிலும் கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் சாதனை செம்மல் உயர்திரு. K.K. பாலுசாமி அவர்கள் பதவியேற்ற பின் கல்லூரி சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் திறமையும் அனுபவமும் மிக்க ஆசிரியர்கள் மூலம் இக்கல்லூரி இயங்கி வருகிறது. தேசிய தர மதிப்பீட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி தற்போது 15 இளங்கலை வகுப்புகளும் இரண்டு முதுகலை வகுப்புகளும் ஆய்வியல் நிறைஞர் வகுப்புகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வியைப் பெற குறைவான கல்வி கட்டணம் மற்றும் தவணை முறையில் பருவ கட்டணம் செலுத்தும் வசதியுடன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி நவீன மயமாக்கப்பட்ட நூலகம் கணினி ஆய்வு கூடங்கள் காற்றோட்டமான வகுப்பறைகள் அனைத்து வசதிகளுடன் கூடிய கல்லூரி கலையரங்கம் குளிர்சாதன வசதியுடன் கூடிய கருத்தரங்க அறை, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அறை மொழியியல் ஆய்வகம் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி கூடம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மேலும் தமிழக அரசின் புதுமைப்பெண் நான் முதல்வன் எஸ்.சி மற்றும் எஸ்.டி ஸ்காலர்ஷிப் மூலமாக மாணவர்களுக்கு சலுகைகள் பெற்றுத் தரப்படுகிறது. கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் மூலமாக ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் இணைந்து தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் 100 சதவீத வேலைவாய்ப்பு மாணவர்களுக்கு பெற்று தரப்படுகிறது. மாநில அரசு பணிகள் வங்கித் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது விளையாட்டு துறையில் தேசிய அளவில் சாதனை புரிய சிறப்பு பயிற்சிகள் மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. மாணவர்களின் தனித்திறமையை கொண்டு வர பல்வேறு கிளப்ஸ் செயல்பட்டு வருகின்றன. அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி கிடைக்க 2024-2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்சமயம் நடைபெற்று வருகிறது. என்று கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.