ஈரோடு, ஜூலை 8 –
ஈரோடு செங்கோட்டை அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஈரோடு வீரப்பன் பாளையத்தில் உள்ள லயன்ஸ் சென்ட்ரல் ஹாலில் நடந்தது. சங்க புதிய தலைவராக சரவணன், உடனடி முன்னாள் தலைவராக ரவிக்குமார், உதவி தலைவர்களாக தமிழ்செல்வன், டாக்டர் ஈஸ்வரன், செயலாளர்களாக ஆனந்த் ரமேஷ், சந்தர், பொருளாளராக தங்கமணி ஆகியோர் பதவியேற்றனர். கண்ஒளித்திட்ட தலைவராக சங்கரன், உறுப்பினர் பெருக்க குழு தலைவராக ஜீவா சண்முகம், ஆளுநர் திட்ட தலைவராக முத்து ராமசாமி, நிதி பெருக்க குழு தலைவராக ஈஸ்வரமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் ராமசாமி, சங்க நிர்வாக அதிகாரியாக ராமசாமி, ரத்த தான திட்ட தலைவராக நவநீத குமார், சேவைத் திட்ட தலைவராக கார்த்தி மற்றும் ராம்கான் ஓசா, குணசேகரன் ராஜாமணி ஆகியோரும் புதிய இயக்குனர்களும் உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஈரோடு மனவளர்ச்சி குன்றிய பள்ளிக்கு அரிசி பருப்பு போன்ற பொருட்களும் ஈரோடு சிஎஸ்ஐ பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் ஆதரவற்ற ஏழைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மேலும் வருகிற 13-ம் தேதி ஈரோடு செங்குந்தர் பள்ளியில் கண் சிகிச்சை முகாம் நடத்துவது புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் இளங்கோவன், ரவி வர்மா, முன்னாள் பன்னாட்டு இயக்குனர் தனபாலன், முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் முத்தையா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு பேசினர்.