தூத்துக்குடி, ஜூன் 26 –
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பொருட்டு கருத்தாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி தூத்துக்குடி ஜின் பேக்டரி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட உதவித் திட்ட அலுவலர் முனியசாமி துவக்கி வைத்தார். இல்லம் தேடிக் கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மங்கை முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் உள்ள வட்டாரங்களில் பணிபுரியக்கூடிய வட்டார வள ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் தன்னார்வலப் பணியாளர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டன.
தமிழக அரசு கொரனா பேரிடர் காலத்தில் மாணவர்களுக்குக் கற்றல் கற்பித்தலில் ஏற்பட்ட குறைபாட்டைச் சரி செய்யும் பொருட்டு தற்போது பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டத்தினை எவ்வாறு இல்லம் தேடிக் கல்வி வகுப்பில் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது என்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சினை மாநிலளவில் பயிற்சி பெற்ற விளாத்திகுளம் ஒன்றியம் இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் மு.க. இப்ராஹிம் மற்றும் குமாரசுப்பிரமணியபுரம் ஆசிரியர் பரத் வழங்கினார்கள்.