தென்தாமரைகுளம், ஜூன் 26 –
தென்தாமரைகுளம் அருகே உள்ள இலந்தையடிவிளை அரசு உயர்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் தருண், மாணவி பபிஷா ஆகியோர் மாநில அரசின் ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றனர். அதேபோல் மத்திய அரசு தேர்வான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவிகள் சஹானா, எஸ்.ஆர்.மஞ்சுளா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு ஸ்ரீ சுபானந்த ஆசிரமம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு கேடயம் மற்றும் ஊக்க தொகை பரிசாக வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆசிரம கர்மகர்த்தா சூஸ்மானந்தா தலைமை வகித்தார். முகிலன்குடியிருப்பு ஊர் தலைவர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆசிரம மேலாளர் சுரேஷ் கார்த்திக், பேனா நண்பர்கள் நிர்வாகிகள் தேவதாஸ், டாக்டர் நெடுஞ்செழியன், பள்ளி தலைமை ஆசிரியர் செம்பியன் மற்றும் முகிலன்குடியிருப்பு ஊர் நிர்வாகிகள் செல்ல சிவலிங்கம், கோபால், சுயம்பு உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.



