திருப்பூர், ஜூலை 09 –
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம் திருமூர்த்தி நகரில் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் இலங்கை தமிழர்களுக்கான புதிய 35 குடியிருப்பு வீடுகளை திறந்து வைத்த நிகழ்ச்சியில் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் பங்கேற்று பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கோ. மலர்விழி, தளி பேரூராட்சித் தலைவர் உதயகுமார் ஆகியோர் உள்ளனர்.