வேலூர், செப். 11 –
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைகோட்டாலம் கிராமம். இக்கிராமத்தில் வசித்து வருபவர் கருப்பன் மகன் கொளஞ்சி. கொளஞ்சி தனது இரண்டாவது மனைவி லட்சுமியுடன் வாழ்ந்து வந்த நிலையில் கொளஞ்சியின் வீட்டு மொட்டை மாடியில் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு தலையின்றி கிடப்பதாக வரஞ்சரம் போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் உயிரிழந்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டதில் கொளஞ்சியின் இரண்டாவது மனைவி லட்சுமி என்பதும் அருகே இருக்கும் ஆண் சடலம் யார் என போலிசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த செல்போனை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் அதே கிராமத்தை சேர்ந்த தங்கராசு என்பரது செல்போன் என தெரியவந்தது. தங்கராசு யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்தவர் என்பது காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் வெட்டி கொலை செய்யப்பட்ட இருவரின் தலையை கொளஞ்சி வேலூர் மத்திய சிறை வளாகத்திற்கு வந்துள்ளார். அப்பொழுது அங்கிருந்த சிறை காவலர்கள் கொளஞ்சியிடம் கேட்டபோது நான் இருவரையும் கொலை செய்து அவர்களுடைய தலையை கொண்டு வந்துள்ளேன். என்னை சிறையில் அடையுங்கள் என்று கேட்டுள்ளார். இதை கேட்ட சிறை காவலர்கள் அதிர்ச்சி அடைந்து வேலூர் பாகாயம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் காவல்துறையினர் கொளஞ்சியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


