ராமநாதபுரம், ஜுலை 16 –
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மதிய உணவு தந்த கல்வியாளர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 123- வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றியம் இரட்டையூரணி ஊராட்சியில் உள்ள கர்ம வீரர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வினை மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே. பிரவின் ஏற்பாடு செய்திருந்தார். மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.