மார்கண்டேயன் எம்.எல்.ஏ. மலரஞ்சலி
விளாத்திகுளம், செப்.11:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவப் படத்திற்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மார்கண்டேயன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அவரது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது சமூகப் பணிகள் மற்றும் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விளாத்திகுளம் திமுக நகரச் செயலாளர் வேலுச்சாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், வார்டு செயலாளர் மாரிராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் தாலுகா தேவேந்திர குல வேளாளர் நலச் சங்கத்தினர் செய்திருந்தனர். இதில் கட்சி நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



