போகலூர், ஆக. 11 –
சவுதி அரேபியா ரியாத்தில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மத்திய மண்டலம் மற்றும் அல் அபீர் மருத்துவமனை சார்பில் ரியாத் அல் அபீர் மருத்துவமனை வளாகத்தில் இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் ரியாத் மண்டல தலைவர் சவுதி மண்டல ஒருங்கிணைப்பாளர் மீமிசல் நூர் முகம்மது மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெறும் மாபெரும் மருத்துவ முகாமில் பொது மருத்துவம், கண் மருத்துவ பரிசோதனை, பல் மருத்துவம், ரத்தம் அழுத்தம், ரத்த சர்க்கரை, உடல் கலவை பகுப்பாய்வு, வாழ்க்கை முறை, பாரம்பரிய நோய்கள் தொடர்பான மருத்துவ ஆலோசனை இலவசமாக வழங்கப்படுகிறது. முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று மண்டல தலைவர் மீமிசல் நூர் முகம்மது தெரிவித்துள்ளார்.



