திருப்பத்தூர், ஜூலை 5 –
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் அருந்ததி தெரு அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் 108 சங்கு அபிஷேகம் மண்டல அபிஷேகம் நிறை விழா சிறப்பாக நடைபெற்றது.
வீராங்குப்பம் அடுத்த அருந்ததி தெருவில் அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் கோயிலில் கடந்த 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கணபதி ஹோமம் பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை இரண்டாம் கால யாக சாலை பூஜை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 24 நாட்கள் பூஜை நடைபெற்றது.
பின்னர் அர்ச்சகர் மணியாரகுப்பம் தேவராஜ் சர்மா குழுவினர் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியம் மேளதாளங்களுடன் யாக கலசங்கள் பூஜை செய்து கலச புனித தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது. மேலும் 108 சங்குகளில் புனித தீர்த்தம் நிரப்பி அதை தம்பதிகள் கைகள் கொடுத்து ஸ்ரீ மாரியம்மனுக்கு 108 சங்கு அபிஷேகம் தீர்த்தம் நடைபெற்றது.
மண்டல அபிஷேகம் விழாவில் மணியாரகுப்பம் வீராங்குப்பம் பெரிய மலையாம்பட்டு, மேல் சாணாங்குப்பம், தென்னம்பட்டு, காரப்பட்டு, அரங்கல்துருகம், குமாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், தாய்மார்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.