சுங்குவார்சத்திரம், ஜூலை 26 –
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த புதுப்பட்டுப் பகுதியில் எஸ்.ஏ.கே கல்விக் குழுமத்தின் அங்கமான ஆமிர் கலீமி அரபிக் கல்லூரி கடந்த 18 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் கல்வி கற்க முடியாத ஏழை இஸ்லாமிய மாணவர்களை கண்டெடுத்து அவர்களுக்கு ஆரம்ப கல்வி தொடங்கி கல்லூரி கல்வி மற்றும் இறை சேவைபணி கல்வி என ஏழு ஆண்டுகள் கற்பித்து உலமாக்களாக உருவாக்கப்படுகின்றனர். அவ்வகையில் இன்று 150 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கல்வி குழுமத்தின் தலைவர் மன்ஜூர் அஹ்மது ஆமீர் ரஷீ திஷாஹ் ஹள்ரத் கிப்லா தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக ஈராக் நாட்டினை சேர்ந்த பக்தாத் ஷஃரீப், முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களின் திருப்பேரர் அப்துல் காதிர் மன்சூர் அல் ஜெய்லானி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். பட்டங்களை பெற்ற மாணவர்கள் 9-ம் வகுப்பு ஆரம்ப கல்வியுடன் தொடங்கி கல்லூரி கல்வி அதனுடன் இறை சேவைக்காண கல்வியை கற்று உலக நாடுகள் முழுவதும் இறை பணி சேவை மேற்கொள்வார்கள் எனவும் இவர்கள் அனைவரும் 7 ஆண்டுகள் இந்த கல்வியை இங்கே தங்கி இருந்து கற்று வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் எட்டாம் வகுப்பு முடித்த 40 மாணவர்கள் இந்த கல்லூரியில் சேர்க்கப்படுகிறார்கள் என இதன் நிர்வாகி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் எஸ்ஏகே கல்வி குழுமத்தின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மாநில நிர்வாகிகள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.