கோவை :மே 6
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி எடுக்கும் நிலையிலும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வெப்ப அலை வீசுவதாலும் போதிய மழை நீர் இல்லாதாலும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும் பொதுமக்கள் குடிக்க தண்ணீர் இன்றியும் அணைகளில் நீர்வரத்து வரலாறு காணாத அளவில் குறைந்து வருவதாலும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுப்பட்டனர்.
விவசாயிகளும் போதிய நீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கால்நடைகளுக்கு புற்கள் கூட இல்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.மழை பெய்ய வேண்டி கோயமுத்தூர் மாவட்டம் ஆனைமலை SA மஹாலில் ஆனைமலை நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆனைமலை ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பாக காலை 7 மணி அளவில் டி எம் எம் கே தலைமை கழக பேச்சாளர் ரெக்ஸ் ரஃபி சிறப்பு தொழுகை நடத்தினார்
இதில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந்த தொழுகையில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பொதுமக்கள் கலந்து கொண்டு மழை வேண்டி இறைவனிடம் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இந்த நிகழ்வில். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் அகமது கபூர் மாவட்டச் செயலாளர் முஜிபுர் ரகுமான். மாமா க மாவட்ட செயலாளர் முகமது மைதீன் மாநில செயற்குழு உறுப்பினர்களின் ரகுமான். ஆனைமலை நகர தலைவர் சாகுல் ஹமீது இமாம்பஷீர் அகமது. இபி பஷீர். நகரதுணைச் செயலாளர் இஸ்மாயில். மருத்துவ அணி பாரூக். இணை மலை ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள். பெரிய பள்ளிவாசல் முத்தவல்லி ஜாகிர் உசேன். சின்ன பள்ளி வாசல் செகரட்டரி சையது இப்ராஹிம். சுல்தானியா சுன்னத் ஜமாத் நிர்வாகி அபிபுல்லா. பொது ஜமாஅத் தலைவர் அப்துல் கையும். மற்றும் ஆண்கள் பெண்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்