சுசீந்திரம், மே 21 –
சுசீந்திரம் அருகே உள்ள ஆண்டார்குளம் பகுதியில் சுசீந்திரம் காவல் உதவி ஆய்வாளர் தனிஷ் லியோன் ரோந்து பணி மேற்கொள்ளும் போது ஆண்டார்குளம் குளக்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஆண்டார்குளத்தைச் சார்ந்த சுஜின் (22) என்பதும் அதே பகுதியைச் சேர்ந்த லிபின் (21) மற்றும் புத்தளம் பகுதியைச் சார்ந்த வைகுண்ட மணி (26) என்பதும் அவர்கள் அதிக லாப நோக்கத்தோடு அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா எனும் போதை பொருளை ஐந்து கிராம் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து சுசிந்திரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுபோல தெங்கம் புதூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் தனிஸ் லியோன் ரோந்து பணி மேற்கொள்ளும் போது ஒரு நபர் கையில் பையோடு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அதிக லாப நோக்கத்தோடு கன்னியாகுமரி அருகே உள்ள வடக்கு குண்டல் பகுதியைச் சார்ந்த சண்முகசுந்தரம் (42) என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த 26 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து சுசிந்திரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


