நாகர்கோவில், ஆகஸ்ட் 26 –
அழகு விட்டு அழகு மாறுதல் மூலம் சென்னையில் பணியாற்ற முதுகலை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பெருநகர சென்னை நகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை மேல்நிலைப் பள்ளியில் 2025 – 26ம் கல்வியாண்டில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்களில் அழகு விட்டு அழகு மாறுதல் மூலம் சென்னை மாவட்டம் பிற மாவட்டங்கள் மற்றும் பிற துறைகளில் விருப்பமுள்ள முதுகலை ஆசிரியர்கள் நேரடியாக தபால் வாயிலாக ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 2 வரை ஆறு நாட்கள் தங்கள் விண்ணப்பங்களை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிட அறிவுறுத்தப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக அழகு விட்டு அழகு மாறுதல் மூலம் சென்னை மாவட்டம் பிற மாவட்டங்கள் மற்றும் பிற துறைகளில் விருப்பமுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகின்ற செப்டம்பர் 6ம் தேதி கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்கள் மற்றும் பிற துறைகளில் பெரும் நகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரிய விருப்பம் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அந்தந்த துறையை சேர்ந்த உரிய துறை தலைவரிடம் தடையின்மை சான்றிதழை பெற்று கலந்து கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, ஹோம் சயின்ஸ், வணிகவியல், அரசியல், அறிவியல், ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


