மொடக்குறிச்சி, ஜூலை 9 –
அரசு மானியம் பெற்று பீர்க்கன் சாகுபடி செய்ததின் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 500 கிலோ வரை மகசூல் ஈட்டி உள்ளேன். இந்த மகசூல் மேலும் ஆறு டன் வரை எதிர்பார்க்கிறேன். தற்போது ஒரு கிலோ பீர்க்கன் ரூபாய் 35 முதல் ரூபாய் 50 வரை விற்கப்படுகிறது. இதன் மூலமாக ரூபாய் 2,00,000 முதல் ரூபாய் 2,50,000 வரை வருமானமாக பெற முடியும் என எதிர்பார்க்கிறேன். எனக்கு இந்த பந்தல் காய்கறி சாகுபடி முறை ஊக்கமளித்துள்ளது. என்னை போன்ற சிறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நிறைந்த மனதோடு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் .
மொடக்குறிச்சி வேலம்பாளையம் கிராமம் வெள்ள பெத்தாம்பாளையம் புதூரை சேர்ந்த விவசாயி முருகேசன் கூறியதாவது: நான் கடந்த 2022-23 ஆம் ஆண்டு தோட்டக்கலைத் துறையின் மூலம் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் உழவர் சந்தைக்கு தொடர்ந்து காய்கறி வழங்கும் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு உழவர் சந்தை அடையாள அட்டை பெற்று எனது வயலில் விளைந்த காய்கறிகளை உழவர் சந்தைக்கு கொண்டு சென்றேன். அங்கு அப்பொழுது பந்தல் காய்கறிகளுக்கு தொடர்ந்து நல்ல விலை கிடைப்பது தெரிய வந்து தோட்டக்கலைத் துறையை அணுகி ஆலோசனை பெற்றேன்.
தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் அளித்த ஆலோசனையின் பேரில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் 2024-25 ஆம் ஆண்டு ஒரு ஏக்கர் பரப்பளவில் நிரந்தர கல்தூண் பந்தல் அமைக்க பயனாளியாக தேர்வு செய்யப்பட்டேன். இந்த திட்டத்திற்கு முன் நான் எனது ஒரு ஏக்கர் நிலத்தில் வெங்காயம் மற்றும் தக்காளி பயிர்களை பயிரிட்டு வருடத்திற்கு ரூ.2,25,000 மட்டுமே வருமானம் ஈட்டினேன். ஆனால் தற்பொழுது பந்தல் அமைத்து பீர்க்கன் மற்றும் பாகல் விவசாயம் செய்கிறேன். இதில் தற்பொழுது பீர்க்கன் ஒரு கிலோவிற்கு ரூ. 30 ம் மற்றும் பாகல் ஒரு கிலோவிற்கு ரூ. 30 ம் கிடைக்கிறது. தற்பொழுது எனது ஒரு ஏக்கர் நிலத்தில் ரூ.4,00,000 மற்றும் 4,50,000 வருமானமாக ஈட்டி வருகிறேன். விவசாய பெருமக்கள் நல்ல வருவாய் ஈட்டும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நிறைந்த மனதோடு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.