தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மே -1 தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு துப்புறவு தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் தாமக தொழிலாளார் நலத்துறை பொறுப்பாளர் விடியல் சேகர், தலைவர் த.இளவரி, பொதுச்செயலாளார் முர்த்தி. ஆலோசகர் ரவீந்திரன் மற்றும் மாநில மாவட்ட தொழிலாளர் நலத்துறை நிர்வாகிகள் மற்றும் பிற அணியினர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் பேசியதாவது:
தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய மாநில அரசுகள் தொழிலாளர் சட்டங்கள் மூலம் பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும். அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அரச போக்குவரத்துத்துறையில் நிரந்தர பணி அளித்திட வேண்டும். ஓய்வு பெற்றவர்களின் பண பலன்களை புதிய ஒய்வூதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் வழங்கிட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகளை வைத்தார்.