மதுரை, ஜூலை 25 –
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் அம்ரூத் 2023-2024 திட்டத்தின் கீழ் ரூ.21.38 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் நேரில் சென்று ஆய்வு
மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பேரூராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவையினை மேம்படுத்த அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வரும் பரவை பேரூராட்சி மண்டலம் 09 ல் வார்டு எண் 14 ஏ.ஐ.பி.இ.எ நகரில் 100000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானது கான்கிரிட் பணி முடிவுற்று பூச்சுப்பணி மற்றும் குழாய் இணைப்பிற்கான பணிகளை ழுமையாக முடிக்க செயல் அலுலவர் மற்றும் பொறியாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக மகா கணபதி நகரில் வைகை ஆற்று பகுதியில் 6.00.மீ விட்டம் உள்ள நீர் உறிஞ்சும் கிணறு 2 எண்ணிக்கையில் அமைக்கப்பட்டு கிணறு மேல்மூடி கான்கிரிட் பணி நிலுவையில் உள்ளது. அப்பணியினை விரைந்து முடிக்கவும் எதிர் காலங்களில் நீர் உறிஞ்சும் கிணற்றின் அருகில் தடுப்பாணை அமைக்கவும் மேலும் மகாகணபதி நகரில் வைகை ஆற்று பகுதியில் 10.50.மீ விட்டம் உள்ள தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி மற்றும் நீர் உந்து நிலையம் பணி நடைபெறுவதையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நீர் உறிஞ்சும் கிணற்றிலிருந்து தரை மட்ட தொட்டிக்கு பிரதான குழாய் அமைக்கும் பணியை ஒப்பந்த காலகெடுக்குள் விரைந்து முடித்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியில் சூப்பர் குளோரினேசன் கருவி அமைக்க அறிவுரை வழங்கி மேடுபள்ளமாக உள்ள பகுதிகளை ஜெ.சி.பி இயந்திரம் மூலம் சீர்படுத்தி பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் பரவை பேரூராட்சி பொதுமக்களுக்கு இத்திட்டத்தினை கொண்டு செல்லும் விதமாக பணிகளை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து முடித்து அறிக்கையினை விரைவில் சமர்ப்பிக்கவும் என்று அறிவுறித்தினார்கள். இந்த ஆய்வின் போது உதவி இயக்குநர் மணிகண்டன் உட்பட பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.