சென்னை, ஜூலை 10 –
அப்போலோ மருத்துவமனை மருத்துவ ஊட்டச்சத்து சிகிச்சைக்கான அதிகாரப்பூர்வமான விரிவான வழிகாட்டி நூலான “எனது உணவு, எனது ஆரோக்கியம்” என்று பொருள்படும் “மை ஃபுட் மை ஹெல்த்” என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது .
அப்போலோ மருத்துவமனை குழுமத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற உணவியல் நிபுணர்களால் எழுதப்பட்டு இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையின் உணவியல் ஆலோசகர் அனிதா ஜதானாவால் தொகுக்கப்பட்டு இந்தப் புத்தகம் வெளியிடப்படுகிறது.
\இந்தப் புத்தக்கத்தில் குழந்தைப் பருவம் முதல் முதுமை வரையில் அனைவருக்கும் தேவையான ஊட்டச்சத்து பற்றிய விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ‘மை ஃபுட் மை ஹெல்த்’ அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்ட ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களுடன் ஒவ்வொரு தனிநபரையும் தயார்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு, உடல் பருமன், இதய நோய்கள், புற்றுநோய் போன்ற வாழ்க்கை முறை தொடர்பான நோய்கள் அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் உணவைப் பற்றி பல தவறான தகவல்களும் பரவலாக உள்ளன. இந்தச் சூழலில் “மை ஃபுட் மை ஹெல்த்” தனிப்பட்ட சுகாதார மேலாண்மைக்கு தெளிவையும் நம்பிக்கையையும் கொண்டு வருவதற்கான நம்பகமான கருவியாகச் செயல்படுகிறது. இந்தப் புத்தகத்தை தலைமை விருந்தினர் சுசரிதா ரெட்டி வெளியிட முதல் பிரதியை அப்போலோ மருத்துவமனையின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டி பெற்றுக் கொண்டார்.
மேலும் அப்போலோ குழுமத்தைச் சேர்ந்த உணவியல், ஊட்டச்சத்து நிபுணர்களின் புகழ்பெற்ற குழுவில் இடம்பெற்றுள்ள டாப்னி டி.கே, பிரியங்கா ரோஹத்கி, ஹரிதா ஷியாம், லேகா ஸ்ரீதரன், பபிதா ஜி. ஹசாரிகா, சம்பா மஜும்தார், வர்ஷா கோரே, எஸ். சந்தியா சிங், சுனிதா சாஹூ ஆகியோர் இந்தப் புத்தகம் வெளிவரச் சிறப்பாகப் பங்களித்துள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் அப்போலா மருத்துவமனை குழுமத்தின் இயக்குநர்கள் சுனிதா ரெட்டி, ப்ரிதா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.