By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனந்தனாறு கால்வாயை முழுமையாக மூடி சுருக்கிய நெடுஞ்சாலை துறையினர்; பாசன துறை புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அனந்தனாறு கால்வாயை முழுமையாக மூடி சுருக்கிய நெடுஞ்சாலை துறையினர்; பாசன துறை புகார்
கனஂனியாகுமரி

அனந்தனாறு கால்வாயை முழுமையாக மூடி சுருக்கிய நெடுஞ்சாலை துறையினர்; பாசன துறை புகார்

Last updated: September 6, 2025 7:46 pm
September 6, 2025
33 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 6 –

குமரி மாவட்டத்தில் தற்போது 4 வழி சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது சுங்கான் கடை பகுதியில் சாலை அமைத்து வருகின்றனர். ஆனால் அந்த பகுதியில் பாசன கால்வாயை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் இப்பகுதி நெல் விவசாயத்திற்கு தண்ணீர் வரவில்லை. மேலும், நீர்வளத்துறைக்கு சொந்தமான இந்த கால்வாயில் இருந்த 4 ஷட்டர்களை மொத்தமாக திருடி எடுத்துச் சென்றுள்ளனர். இதன் காரணமாக வருகின்ற கொஞ்சம் தண்ணீரையும் பாசனத்திற்கு முறையாக விநியோகிக்க இயலவில்லை.

மேலும் இந்த கால்வாயை சுருக்கியதன் காரணமாக சுங்கான்கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகில் இருக்கும் பனங்குளம் மற்றும் அக்கினியாகுளத்திற்கு தண்ணீர் வராமல் இந்த இரண்டு புரவிலும் நெற்பயிர் கருகி வருகிறது. 6 மாதங்களுக்கு முன்பு இதேபோன்று இந்த பாசன கால்வாயை சுருக்கிய போது பாசனத்துறை நிர்வாகிகளும், நீர்வளத்துறை அதிகாரிகளும் பிரச்சனை ஏற்படுத்தியதால் தற்காலிகமாக அப்போது தண்ணீர் தோண்டி விடப்பட்டது. தற்போது மீண்டும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கால்வாயின் குறுக்கே கல்வெர்ட் மற்றும் தடுப்புச்சுவர் கட்டி தண்ணீர் செல்லவே முடியாத அளவிற்கு பணிகள் செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாய பிரதிநிதிகள் பிரச்சனையை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினர்.

இன்று பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ மற்றும் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் வல்சன் போஸ், உதவி பொறியாளர் ரமேஷ் ராஜன் மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் இப்பகுதிக்கு வந்து அந்த பணியை தடுத்து நிறுத்தினர். அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளும் நிறுவன பொறியாளர் ராஜேஷ் தலைமையிலான 4 வழிச்சாலை பணியை மேற்கொண்டு வரும் பணியாளர்களும் அங்கு வந்தனர்.

நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அருகில் இருந்த பாப்பனாங்ககுளத்தின் மடை பகுதியை தோண்டி தண்ணீர் செல்வதற்கு தற்காலிகமாக மட்டும் ஒரு வழி ஏற்படுத்தி உள்ளனர். சானலின் குறுக்கே போடப்பட்டுள்ள கான்கிரீட் சுவரை அகற்றுவது சம்பந்தமாக எந்த முடிவும் எட்டப்படவில்லை. தற்காலிகமாக கரைப்பகுதி தோண்டி விடப்பட்டுள்ளதால் தண்ணீர் வரும்போது உயரமான அந்த குளத்தினுடைய கரைப்பகுதி உடைந்து சானலுக்குள் விழுவதோடு மீண்டும் தண்ணீர் செல்லாது. ஆகவே ஒவ்வொரு முறையும் இந்த பிரச்சினை ஏற்படுவதை தடுக்க நிரந்தரமாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கால்வாயை ஏற்கனவே எப்படி இருந்ததோ அப்படி சிமெண்ட் மூலம் கட்டி ஷட்டர்களையும் அமைத்து தந்து சானலின் குறுக்கே உள்ள புதிய கான்கிரீட் சுவரை அகற்றி புதிய கல்வெர்டுக்குள் தண்ணீர் செல்வதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதேபோன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு பாசன கால்வாய்களை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மூடிக்கொண்டு இருப்பதால் இந்த புதிய நான்கு வழிச்சாலையின் ஒரு புறம் தண்ணீர் தேங்கி சதுப்பு நிலமாக மாறுவதோடு கீழ் பகுதி மொத்தமாக தண்ணீர் கிடைக்காமல் வறண்டு பாலைவனமாக மாறிவிடும். மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே லாரி டிரைவர் கொலை வழக்கு; மனைவி, மாமியார் கைது; கள்ளக்காதலன் மேலும் ஒருவருக்கு போலீஸ் வலை
மீனவ கிராமத்தில் கடல் அலை தடுப்பு சுவர்
புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டல் நிகழ்ச்சி
அக் -1 -ல் பத்மநாபபுரம் சர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
கோரிக்கை மனு அளித்த நாம் தமிழர் கட்சியினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்

ஈரோடு லக்காபுரம் புதூரில்சங்கர ஜெயந்தி மஹோத்சவம் நிகழ்ச்சி

May 14, 2024
133 Views
மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிக்கு தேர்வு
சிறுமியை தாக்கியதாக அங்கன்வாடி ஆசிரியை மீது வழக்கு
தக்கலை புதிய பேருந்துநிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
ஒற்றையால்விளையில் புதிய அங்கன்வாடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account