டெல்லி, அக்.17.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி நுரையீரல் தொற்றுப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.



