கோவை, அக். 06 –
கோவை முத்துக் கவுண்டம்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பபாளையம் பகுதியில் உள்ள யோகேஸ்வரி திருமண மண்டபத்தில் கோழிப்பறை அஹால்யா டயாபடீஸ் மருத்துவமனை மற்றும் அஹல்யா கண் மருத்துவமனை மற்றும் கோவை தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் &திண்ணை பிரச்சாரம் சூலூர் வடக்கு ஒன்றியம் VP. கந்தவேல் MSW ஒன்றிய கழக செயலாளர், மாவட்ட அம்மா பேரவை அமைப்பு செயலாளர் எஸ். விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி மற்றும் கொள்கை பரப்பு துணை செயலாளர் தோப்பு அசோகன், ஒன்றிய பேரவை செயலாளர் ஆனந்த குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.



