திருப்பூர், ஜூலை 26 –
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 86-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் மருத்துவ முகாம் மாவட்ட நிர்வாகி அன்பு ரமேஷ் தேவர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தேசிய துணை தலைவர் பி.வி. கதிரவன் கரைபுதூர் அருகே உள்ள கள்ளிமேடு அன்பு ரமேஷ் தேவர் தோட்டத்தில் துவக்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் கள்ளர் சீர்திருத்த பள்ளிக்கு பெயர் மாற்றுதல் அரசு ஆணையை திரும்ப பெற வேண்டும் எனவும் அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடையவில்லை எனவும் அடுத்தாண்டு நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் மூன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சேலை மற்றும் அரிசி சிப்பம் வழங்கப்பட்டது.
விழாவிற்கு மாவட்ட நிர்வாகிகள் ராமர், ராஜா, பசும்பொன் பாலு, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விறகு செந்தில், சுந்தர பாண்டி, பொன்னாங்கன் வெற்றி, சிவா, மணி ஆகியோர் வரவேற்றனர். திருப்பூர் தேவரின கூட்டமைப்பு தலைவர்கள், முக்குலத்து தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.