வேலூர், ஆகஸ்ட் 08 –
கடந்த நான்கு ஆண்டுகளில் வேலூர் மாவட்டத்தில் 18,035 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு தற்பொழுது 21770 நபர்களுக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.ப. இராசுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பெற்ற பயனாளிகள் தங்களின் மனம் நிறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் 25.6.2025 அன்று வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் ஆட்சேபனையுற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வரும் நபர்களுக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் நிலங்களை வரன்முறை செய்து 21,770 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் அடையாளமாக 12 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினர்.
அதன்படி ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் கிராமரத்தமாக வகைபாடு மாற்றம் செய்து வழங்கப்பட்ட பட்டா 2074, 5 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகள் தவிர 1330, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் கிரையம் பெற்றவர்களுக்கு உட்பிரிவு செய்து வழங்கப்பட்ட பட்டா – 10,000, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கிரையம் பெற்றவர்களுக்கு உட்பிவு செய்து வழங்கப்பட்ட பட்டா -2122 சர்க்கார் மனை வகைபாட்டிலிருந்து இரயத்துமனைகளாக மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்ட பட்டா 240, ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் பட்டா வழங்கப்பட்டு தற்போது இணையவழியில் வழங்கப்பட்ட பட்டா – 4525, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் பட்டா வழங்கப்பட்டு தற்போது இணையவழியில் வழங்கப்பட்ட பட்டா 1473, நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வரன்முறை செய்து வழங்கப்பட்ட பட்டா 212 சர்க்கார் மனை வகைபாட்டிலிருந்து இரயத்துமனைகளாக மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்ட பட்டா -240, ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் பட்டா வழங்கப்பட்டு தற்போது இணையவழியில் வழங்கப்பட்ட பட்டா 4525, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் பட்டா வழங்கப்பட்டு தற்போது இணையவழியில் வழக்கப்பட்டபட்டா – 1473, நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வரன்முறை செய்து வழங்கப்பட்ட பட்டா 1922 என மொத்தம் 2075 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படவுள்ளது.
இவ்வரசு பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்களில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இணையவழி பட்டா மற்றும் நத்தம் வகைபாடு உள்ளிட்ட அனைத்து இனங்களில் 18035 பட்டாக்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட 21770 பட்டாக்களையும் சேர்த்து மொத்தம் 39,811 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படவுள்ளது ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா.சுப்புலெட்சுமி.இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
572 இதனை தொடர்ந்து மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திருதுரைமுருகன், அவர்கள் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 9517 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை பொதுமக்களுக்கு வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக 22.07.2025 அன்று காட்பாடி ரங்காலயா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். தொடர்ந்து 25.07.2025 அன்று வள்ளிமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 283 பயனாளிகளுக்கும். அதனை தொடர்ந்து 26.07.2025 அன்று குகையநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 180 பயனாளிகளுக்கும் வீட்டுமனைப்பட்டாக்களை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கிணத்.
அதனை தொடர்ந்து வேலூர் மற்றும் ஆற்காடு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 4224 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை பொதுமக்களுக்கு வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வேஇரா. சுப்புலெட்சுமி. இஆப அவர்களும், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திருபகார்த்திகேயன், அவர்களும், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் திருஜெஎல். ஈஸ்வரப்பன், அவர்களும் 23.07.2025 அன்று பேபி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 965 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்கள்.
அதனை தொடர்ந்து குடியாத்தம் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 2070 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை வழங்குவடைங்கி வைக்கும் விதமாக குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட யிலுள்ள 50D பயனாளிகளுக்கு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா.சுப்புலெட்சுமி.இ.ஆ.ப. அவர்களும், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி வி.அமுலு விஜயன், அவர்களும், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அசெ.வில்வநாதன், அவர்களும் 2007–2025 அன்று குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஜே.எஸ்மற்றாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார்கள்.
1670 அதனை தொடர்ந்து வகுப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக 287 பயனாளிகளுக்கு மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திருதுரைமுருகன், அவர்கள் 0208.2025 அன்று வகுப்பம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கிணர்.
வேலூர் மாவட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பெற்ற பயனாளிகள் தெரிவித்ததாவது: காட்பாடி வட்டம், குகையநல்லூர் பகுதியை சார்ந்த இராபர்ட், அவர்கள் தெரிவித்ததாவது: வணக்கம் நான் காட்பாடி வட்டம், குகையநல்லூர் பகுதியில் வசித்து வருகிறேன். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டி முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களை அணுகியபோது எங்களுக்கு வீட்டுமனை பட்டா கொடுத்தார்கள். இருந்தபோதிலும் அப்போது 13 பேருக்கு பட்டா கொடுத்தது. செல்லாமல் போனது ஸ்டே ஆர்டர் வாங்கி விட்டார்கள். இதனால் 20 வருடமாக எங்களுக்கு பட்டா கிடைக்காமல் போய்விட்டது. திரும்பவும் நாங்கள் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்களை அணுகியபோது அவர் அதற்குண்டான ஏற்பாடு செய்து எங்களுக்கு அதாவது 113 பேருக்கு வீட்டுமனை பட்டா கொடுத்திருக்கிறார்கள். அதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் 113 பேருக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடுகட்டி தரும்படி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு சிறிய வேண்டுகோள் வைக்கிறோம். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் எங்களுக்கு வீடு கட்டி கொடுப்பார் என்று நம்பிக்கை உள்ளது. எனவே அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவிகளை செய்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய சார்பாகவும், 113 பேர் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
காட்பாடி வட்டம், சுகர்மில் பகுதியை சார்ந்த திருமதி ஸ்ரீபன் பிரியா அவர்கள்
தெரிவித்ததாவது: மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் சிறிய முயற்சியினால் எங்களுக்கு இந்த வீட்டுமனைப் பட்டா கிடைத்துள்ளது. சொந்த வீடு இல்லாமல் நிறையபேர் ரொம்ப கஷ்டபட்டு இருக்கும். தற்போது இந்து வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது பெரு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வீட்டுமனைப் பட்டா வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
காட்பாடி வட்டம், சுகர்மில் பகுதியை சார்ந்த திருமதி ராணி அவர்கள் தெரிவித்ததாவது: வணக்கம் என்னுடைய பெயர் ராணி. நான் காட்பாடி சுகர்மில் பகுதியில் வசித்து வருகிறேன். 19 வருடங்களாக எங்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லாமல் இருந்தது. இப்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அய்யா அவர்கள் எங்களுக்கு வீட்டுமனை பட்டா கொடுத்திருக்கிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த வீட்டுமனை பட்டா பெற்றதன் மூலம் தன்னுடைய மனம் நிறைந்துள்ளது. மேலும் வீட்டுமனை பட்டா கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.