வேலூர், ஜூன் 30 –
வேலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் வேலூர் மாவட்ட கிளை சார்பில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து சரியான எடையிட்டு வழங்கிட வேண்டும் என்றும் விடுமுறை நாட்களில் நகர்வு பணியினை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பன போன்ற 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட போராட்ட குழு தலைவர் எஸ்.கே. விஜயகுமரன், தலைமையிலும் மாவட்ட பொருளாளர் ஆனந்தன் முன்னிலையிலும் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் மற்றும் வேலூர் மாவட்டம் மாநிலத் முன்னாள் துணை தலைவர் தர்மலிங்கம் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் நிறைவாக மாவட்ட போராட்டக் குழு செயலாளர் நவீன் குமார் நன்றியுரையாற்றினார்.