வேலூர், செப். 2:
வேலூர் பழைய பைபாஸ் சாலை, தோட்டப்பாளையம் அருகே ராயல் இன்ஃப்ரா சார்பில் அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் பல்வேறு கட்டுமானப் பொருட்களுக்கான மாபெரும் சிறப்பு ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. ராயல் இன்ஃப்ரா உரிமையாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் மண்டல சந்தைப்படுத்தல் தலைவர் எஸ். நடேஷ் மற்றும் கே.ஆர்.கே. கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தைச் சேர்ந்த ஆர். குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
அவர்கள் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி ஷோரூமை திறந்து வைத்தனர். தொடர்ந்து வேலூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் வி.எஸ். அர்ஜுனன், பில்டர்ஸ் அசோசியேஷன் சார்பில் பி. வேல்முருகன், ஒப்பந்ததாரர்கள், கட்டுமானத் தொழில் நிறுவனர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு மலர்க்கொத்து வழங்கி, பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து ஷோரூம் அலுவலகம் மற்றும் இருப்புக் கிடங்கை பார்வையிட்ட விருந்தினர்கள், விற்பனைப் பணிகளையும் தொடங்கி வைத்தனர்.



